மோசமான வானிலை காரணமாக வயநாடு செல்வதை ஒத்தி வைப்பதாக ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தானும், பிரியங்காவும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திப்பதற்காக வயநாட்டிற்கு செல்ல இருந்ததாகவும், இடைவிடாத மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, தங்களால் தரையிறங்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இருப்பினும், கூடிய விரைவில் வயநாட்டிற்கு செல்லவுள்ளதாகவும், ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வயநாட்டிற்கு செல்லமுடியாவிட்டாலும், இந்த துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.