மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், சட்டவிரோதமாக அடித்தளத்தில் இயங்கி வந்த பயிற்சி மையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
டெல்லி பழைய ராஜேந்தர் நகரில் உள்ள பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ள நீர் புகுந்து 3 மாணவர்கள் பலியாகினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில், விதிகளை மீறி இயங்கி வரும் பயிற்சி நிறுவனங்கள் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தூரில் போதிய கட்டட வசதியின்றி, பிளைவுட் தடுப்புகளிலும், ஓட்டுக் கட்டடங்களிலும் இயங்கி வந்த பயிற்சி மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டன.