வெனிசுலா அதிபர் தேர்தலில் மீண்டும் நிக்கோலஸ் மதுரோ வெற்றிபெற்ற நிலையில், அவருக்கு எதிராக வெடித்த வன்முறையில் 11 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 28ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில், நிக்கோலஸ் மதுரோ, 51 சதவீத வாக்குகளைப் பெற்றதாகவும், அவரை எதிர்த்து போட்டியிட்ட எட்முண்டோ கோன்சலெஸ் 44 சதவீத வாக்குகளை பெற்றதாவும் தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
நிக்கோலஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறையில் 11 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர்.