ஹிமாச்சல பிரதேச மாநிலம், குலு மாவட்டத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்தது.
இதன் காரணமாக, தோஷ் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாலங்கள், கடைகள் உள்ளிட்டவை அடித்து செல்லப்பட்டன.
அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்கள் கரையோரப் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டுமெனவும், தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.