ஈரோட்டில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானீஸ்வரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தேடி வருவதாகவும் அவர் கூறினார்.
குற்றச்சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பவானீஸ்வரி குறிப்பிட்டார்.