ஆன்லைன் வாயிலாக சினிமா டிக்கெட் வாங்குவதற்கான கூடுதல் கட்டணத்துக்கு, தமிழக அரசு கேளிக்கை வரி விதிக்க முடியாது என, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ஆன்லைன் வாயிலாக வாங்கப்படும் சினிமா டிக்கெட்டிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இந்த கூடுதல் கட்டணத்திற்கு கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இதனை எதிர்த்து வணிக வரி அலுவலர் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மக்கள் தங்கள் வசதிக்காக ஆன்லைனில் டிக்கெட் வாங்குவதற்கு கேளிக்கை வரி விதிக்க முடியாது என உத்தரவிட்டது.