சீனாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். ஹுனான் மாகாணத்தில் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சுமார் 900 குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளன. சாலைகள் சேதம் அடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் மாயமான 3 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.