தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
சாத்தூர் சாலையில் அமைந்துள்ள ஏ.என்.ஏ. நகரில் உள்ள பங்களாவில் குட்கா பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், அந்த வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது 16 மூட்டைகளில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சம்பவத்தில் தொடர்புடைய ரகுபதி, பாண்டிமணி ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.