கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்க தடை தொடர்கிறது.
தொடர் மழையால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் கோதை ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.