வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த கர்நாடகாவை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்டுள்ள கன்னடர்களை உடனடியாக காப்பதே முதல் பணி என குறிப்பிட்டுள்ள அவர், வயநாட்டில் பணிக்காக சென்றுள்ளவர்களை உடனடியாக கர்நாடகாவிற்கு அழைத்துவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.