அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு வந்த சேர்ந்தது.
அதனைத்தொடர்ந்து கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு தன்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.