சென்னை டி.பி.ஐ. வளாகத்தை முற்றுகையிட கோவில்பட்டியில் இருந்து புறப்பட்ட ஆசிரியர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டிட்டோஜாக் சார்பில் டி.பி.ஐ. வளாகத்தை முற்றுகையிட கோவில்பட்டியில் இருந்து ஆசிரியர்கள் சென்னை நோக்கி புறப்பட்டனர்.
அவர்களை போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கோவில்பட்டியில் 70 சதவீத ஆசிரியர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டதால் ஆசிரியர்கள் இன்றி பள்ளிகள் இயங்கும் நிலை ஏற்பட்டது.