மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் மர்ம நபர்களால் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்ட முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விநாயகர்பாளையம் பகுதியை சேர்ந்த அருண்குமார், பாத்திரக்கடை நடத்தி வந்தார். முன்னாள் பேரூராட்சி கவுன்சிலரான அருண்குமார், கடந்த 26ம் தேதி மாசிலாமணி நாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றார்.
அப்போது அங்குவந்த மர்ம நபர்கள், அருண்குமார் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர். இதில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த அருண்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.