விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெறும் 3ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன புகைப்பிடிப்பான் கருவி மற்றும் சுடுமண் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது.
சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் கடந்த ஜூன் 18ம் தேதி முதல் 3ம் கட்ட அகழாய்வு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த அகழாய்வில் தற்போது சுடு மண்ணாலான புகைபிடிப்பான் கருவி மற்றும் சுடுமண் குழாய் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 3ம் கட்ட அகழாய்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.