தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது.
விஷால் மற்றும் தனுஷ் திரைப்படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை மற்றும் தற்காலிக படப்பிடிப்பு நிறுத்தம் என தயாரிப்பாளர் சங்கம் சமீபத்தில் அறிக்கையை வெளியிட்டது. இதற்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது.
நடிகர்களின் சம்பளம் குறைப்பு மற்றும் திரைப்படங்களின் தயாரிப்பு செலவை குறிப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
அதேபோல் சமீபத்தில் அவர்கள் வெளியிட்ட அறிக்கை குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கின்றனர். வரும் 16ஆம் தேதியிலிருந்து புதிய திரைப்படங்களின் படப்பிடிப்பை தொடங்குவதில்லை என்றும் தற்போது தொடங்கி நடைபெற்று வரும் படங்களின் வேலைகளை அக்டோபர் மாதத்திற்குள் முடித்து விட வேண்டும் எனக் கூறியிருந்தனர். இந்த நிலையில் இது குறித்தும் நாளைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.