கேரள மாநிலம் வயநாட்டில் இயற்கை பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சேவா பாரதி அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களை தகனம் செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
வயநாட்டில் தொடர் மழை மற்றும் நிலச்சரிவினால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோரை காணவில்லை.
மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியவை தொடர்ந்து ஈடுபட்டுள்ளன. இவர்களுடன் ஆர்.எஸ்.எஸ் சேவா பாரதி அமைப்பினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நிலச்சரிவினால் முற்றிலும் பாதிக்கப்பட்ட சூரமாலா பகுதியில் மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். தற்காலிக எரியூட்டும் மேடை மூலம் நிலச்சரிவில் உயிரிழ்ந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் பணியை சேவா பாரதி அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சேவை அமைப்பினரும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட சூரமாலா பகுதியில் சேவா பாரதி அமைப்பினர் உதவி மையத்தை அமைத்து மக்களுக்கு உணவு வழங்கி வருவதோடு, அவர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு சேர்க்கும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளா மட்டுமின்றி, தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆர்.எஸ். எஸ்ஸின் சேவா பாரதி அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் முகாமிட்டு ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து மீட்பு மற்றும் உதவி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.