டெல்லியின் காஜிபூர் பகுதியில் தண்ணீர் தேங்கிய வாய்க்காலில் மூழ்கி பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய தலைநகர் டெல்லியில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இரவு முதல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது.
டெல்லி என்சிஆர், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காஜிபூர் பகுதியில் தண்ணீர் தேங்கிய வாய்க்காலில் மூழ்கி குழந்தை உட்பட பெண் உயிரிழந்த நிலையில், சப்ஜி மண்டி பகுதியில் கனமழை காரணமாக கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
கட்டட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தர்யாகஞ்ச் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில், அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. கனமழை காரணமாக டெல்லியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.