சிம்லாவில் மேகவெடிப்பு காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையில் 50க்கும் மேற்பட்டோர் அடித்து செல்லப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இமச்சாலப் பிரதேசத்தின் சிம்லா மாவட்டம், சமேஜ்காட் பகுதியில் மேக வெடிப்பு காரணமாக கனமழை பெய்தது. இதில் வெள்ளத்தில் 36 பேர் அடித்து செல்லப்பட்டதாகவும், மீட்புப் பணியில் மாநில பேரிடர் குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, மண்டி பகுதியில் கனமழையால் அடித்து செல்லப்பட்ட ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், 9 பேர் மாயமாகிவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மண்டி பகுதியில் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.