பாரீஸ் ஒலிம்பிக்கின் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரனாய் வெற்றி பெற்றார்.
பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரரான எச்.எஸ். பிரனாய் மற்றும் வியட்நாம் நாட்டை சேர்ந்த டுக் பாட் லி ஆகியோர் விளையாடினர். இந்த போட்டியில், 16-21, 21-11, 21-12 என்ற செட் கணக்கில் வியட்நாம் வீரரை வீழ்த்தி, பிரனாய் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.