ஒரு உலகளாவிய சிந்தனைக் குழு தான் ஆர்.எஸ்.எஸ்! - ஜெகதீப் தன்கர்
Jan 14, 2026, 03:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு உலகளாவிய சிந்தனைக் குழு தான் ஆர்.எஸ்.எஸ்! – ஜெகதீப் தன்கர்

Murugesan M by Murugesan M
Aug 1, 2024, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், தேசிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பங்களிப்பதற்கான அனைத்து உரிமைகளும் ஆர்எஸ்எஸ்ஸுக்கு உண்டு என்றும், இந்த தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்பதற்கு முழு அரசியலமைப்பு உரிமைகளை கொண்ட அமைப்பு தான் ஆர்எஸ்எஸ் என்றும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது , தேசிய தேர்வு முகமை போன்ற நிறுவனங்களில் தலைவராக பணியமர்த்துவதற்கான தகுதி ஆர்எஸ்எஸ் உடனான தொடர்பு தான் என்று சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ராம்ஜி லால் சுமன் கருத்து தெரிவித்தார்.

உடனடியாக இதனை ஆட்சேபித்த அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், இதனை அரசியலாக்கக் கூடாது என்று இந்த அவையில் பலமுறை தான் கூறியிருப்பதாகவும், உறுப்பினர் விதிகளை மீறியதோடு இந்திய அரசியலமைப்பையே காலில் போட்டு மிதித்திருப்பதாகவும் கடுமையாக கூறினார்.

நாட்டுக்கு சேவை செய்யும் ஒரு அமைப்பை தனிமைப்படுத்த தன்னால் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த அவைத் தலைவர்,  ஒரு உலகளாவிய சிந்தனைக் குழுவான ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 3வது பகுதியின் கீழ், தேசத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குப் பங்களிப்பதற்கான அனைத்து உரிமைகளும் இருக்கிறது என்று கூறினார்.

மேலும், குற்றம்சாட்ட முடியாத நற்சான்றிதழ்களைக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ், நாட்டுக்கு தன்னலமின்றி சேவை செய்வதில் ஆழ்ந்த அர்ப்பணிப்பு கொண்டவர்களை உள்ளடக்கியதாக உள்ளது என்று குறிப்பிட்ட ஜெகதீப் தன்கர், மேலும் நாட்டின் நலன், நாட்டின் கலாச்சாரம் ஆகியவற்றிற்காகப் பங்காற்றி வருவதாகவும், அத்தகைய அமைப்பின் உறுப்பினர்களை தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க முடியாது என்று கூறுவது அரசியலமைப்புக்கு எதிரானது மட்டுமல்ல, விதிகளுக்கும் அப்பாற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் , இந்திய மக்களைப் பிளவுபடுத்தும் செயல்களில் ஈடுபடுவதை கவனித்ததாக தெரிவித்த அவைத்தலைவர், இது ஒரு மோசமான திட்டமிடல் என்றும் , நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு மோசமான வழிமுறை என்று கூறினார்.

இப்படி மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் செயல்படுபவர்கள், நாட்டுக்கும், இந்திய அரசியல் அமைப்புக்கும் பெருந் தீங்கை செய்கிறார்கள் என்றும் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.

Tags: jagdeep dhankhar in rajya sabhamallikarjun kharge jagdeep dhankharjagdeep dhankhar newsjagdeep dhankar newsjagdeep dhankhar on rsskharge vs jagdeep dhankharjagdeep dhankhar mallikarjun khargeVice-President Jagdeep Dhankharjagdeep dhankhar vs mallikarjun khargeJagdeep Dhankharmallikarjun kharge vs jagdeep dhankarJagdeep Dhankarjagdeep dhankhar on congressRSS is a global think tank! - Jagadeep Thankarjagdeep dhankhar rajya sabhajagdeep dhankhar speechjagdeep dhankhar sanjay singh
ShareTweetSendShare
Previous Post

ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கான தடை ரத்து! – மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

Next Post

திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்! – ராமதாஸ்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies