உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு லோக் அதாலத்தில், நிலுவையில் உள்ள வழக்குகளை 4வது நாளாக நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர்.
உச்சநீதிமன்றத்தில், பட்டியலிடப்பட்ட வழக்குகளை சுமூகமாகவும், விரைவாகவும் தீர்வு காணும் வகையில், சிறப்பு லோக் அதாலத் அமைக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் முதல் 7 பெஞ்சுகள் விசாரிக்கும் சிறப்பு லோக் அதாலத், கடந்த ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை பிற்பகல் 2 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது.
உச்ச நீதிமன்றத்தில் 80 ஆயிரம் வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் 50 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.