நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்களுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேபாள நாட்டில் நடந்த சர்வதேச சிலம்ப போட்டியில் இந்திய அணி 83 தங்கம், 35 வெள்ளி மற்றும் 16 வெண்கலப் பதக்கங்களை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்நிலையில் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்கள் இன்று சென்னை திரும்பிய நிலையில் அவர்களுக்கு செண்ட்ரல் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது பேட்டியளித்த தமிழ்நாடு அணியின் பயிற்சியாளர் சந்தீப் குமார், மற்ற விளையாட்டுகளை போல சிலம்பப் போட்டிக்கும் அரசு சலுகைகள் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.