திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வீடு புகுந்து 19 சவரன் நகை மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மலையப்பபுரம் கிராமத்தை சேர்ந்த குணசேகரன், வாழைக்காய் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பணி நிமித்தமாக குணசேகரன் வெளியே சென்றிருந்தார்.
அப்போது யாரும் இல்லாத வேளையில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 19 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர். இதுகுறித்து குணசேகரன் புகாரளித்த நிலையில் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.