ஸ்குவிட் கேம் வெப் சீரிஸின் இரண்டாவது சீசன் டிசம்பர் 26 ஆம் தேதி நெட் ஃபிளிக்சில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு மொழிகளில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ஸ்குவிட் கேம் வெப் சீரிஸ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
மாறுபட்ட கதைக்கருவை வைத்து உருவாக்கப்பட்ட இந்த வெப் சீரியஸிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தற்போது அதன் இரண்டாம் சீசனுக்கான அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர், 3வது மற்றும் கடைசி சீசன் 2025-ல் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.