செல்ஃபி எடுக்க வந்த ரசிகரை நடிகர் சிரஞ்சீவி தள்ளிவிட்ட வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தெலுங்கின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி ஒலிம்பிக் போட்டிகளை காண்பதற்காக சில தினங்களுக்கு முன்பு பாரிஸ் சென்றார்.
பாரிஸிலிருந்து நாடு திரும்பிய அவரிடம் விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது அந்த ரசிகரை சிரஞ்சீவி தள்ளி விட்டதாக தெரிகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.