ரயிலில் பொதுப் பெட்டிகள் பற்றாக்குறையை சரிசெய்ய, 2,500 பெட்டிகளைத் தயாரிக்கும் பணியை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளதாக மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மக்களவையில் பேசிய அவர், அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய ஏசி அல்லாத ரயில் பெட்டிகளை தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு ரயிலிலும் குறைந்தது 4 பொதுப் பெட்டிகள் இருப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். மேலும் 50 ‘அமிர்த் பாரத்’ ரயில்களை தயாரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.