சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல்! : கமலா ஹாரிஸ் இந்தியரா? சந்தேகம் எழுப்பும் டிரம்ப்
Mar 15, 2026, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல்! : கமலா ஹாரிஸ் இந்தியரா? சந்தேகம் எழுப்பும் டிரம்ப்

Murugesan M by Murugesan M
Aug 2, 2024, 09:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் இன அடையாளம் பற்றிய முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சர்ச்சைக்குரிய கேள்வி, அமெரிக்க தேர்தலை சூடு பிடிக்க வைத்திருக்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி புதிய அதிபரை அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் நபர் சர்வதேச அளவில் அதிக செல்வாக்கை கொண்டிருப்பார் என்பதால், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் உலக நாடுகளுக்கே மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

தற்போது அமெரிக்க அரசியலில், இரு கட்சிகளின் ஆதிக்கமே உள்ளது. ஒன்று ஜனநாயக கட்சி. மற்றொன்று குடியரசு கட்சி.

தற்போது ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அதிபராக உள்ள ஜோ பைடன் இந்த முறை போட்டியில் இருந்து விலகி விட்டார். அவருக்குப் பதிலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

குடியரசு கட்சி, சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இந்நிலையில், அமெரிக்க மக்கள் மத்தியில் கமலா ஹாரிஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. கமலா ஹாரிஸின் மக்கள் செல்வாக்கு நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

முன்னதாக கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் முன்மொழிந்த முதல் வாரத்தில் மட்டும், தேர்தல் பிரசார நிதியாக சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஜனநாயக கட்சிக்குக் கிடைத்தது.

இந்த சூழலில், தேசிய கறுப்பரின பத்திரிக்கையாளர் சங்க மாநாடு சிகாகோவில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப்பிடம் கறுப்பரின வாக்காளர்கள் பற்றி கேள்வி கேட்கப் பட்டது.

இதற்கு பதிலளித்த டொனால்ட் ட்ரம்ப், கமலா ஹாரிஸ் பாரம்பரியம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். தன்னை இந்தியராக காட்டி வந்த கமலா ஹாரிஸ், இப்போது தன்னை ஆப்பிரிக்கராக அடையாளம் காட்ட முயற்சிக்கிறார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் கமலா ஹாரிஸ் இந்தியரா? கறுப்பரா? எனபது தனக்கு தெரியாது என்று கூறிய டொனால்ட் ட்ரம்ப் இந்த விஷயத்தில் கமலா ஹாரிஸ் வெளிப்படையாக இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

டொனால்ட் ட்ரம்ப் இதற்கு முன்பும் இதே போன்ற கருத்துகளை பேசியிருக்கிறார். அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா இருந்தபோது, ‘பராக் ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லை” எனக் குற்றம்சாட்டி பிரசாரம் செய்திருந்தார். தற்போது அதே போன்ற ஒரு கருத்தை கமலா ஹாரிஸ் மீதும் முன்வைத்திருக்கிறார்.

முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கருத்தைக் கண்டித்துள்ள வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர், ஒருவர் தன்னை எப்படி அடையாளம் காட்டுகிறார் என்பது பற்றி பேச யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என்றும், அது அவர்களின் சொந்த உரிமை என்றும் தெரிவித்திருக்கிறார்.

தனது இன அடையாளத்திற்கு எதிரான கருத்துக்களுக்குப் பதிலடி கொடுத்திருக்கும் கமலா ஹாரிஸ், டிரம்ப்பும் அவரது பிரச்சாரமும் அமெரிக்காவைப் பின்னோக்கி கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

மேலும், உண்மையைச் சொல்லும் ஒரு தலைவரைத் தான் அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்றும், வேறுபாடுகளால் அமெரிக்க மக்களைப் பிரிக்க முடியாது என்றும் கமலா ஹாரிஸ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸின் தாய் இந்தியர். அவரது தந்தை ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர்.

கலிபோர்னியாவின் ஓக்லாண்டில் பிறந்து, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் பெண், முதல் கருப்பு மற்றும் முதல் ஆசிய வம்சாவளி துணை அதிபராவார்.

மேலும், வரும் தேர்தலில் வெற்றி பெற்றால், நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெறுவார்.

Tags: American election heating up! : Is Kamala Harris Indian? Doubtful Trump
ShareTweetSendShare
Previous Post

சொல்லி அடித்த இஸ்ரேல்! : ஈரானில் வைத்தே தீர்த்து கட்டப்பட்ட ஹமாஸ் தலைவர்!

Next Post

வயநாடு நிலச்சரிவு! : உயிரிழந்தோர் எண்ணிக்கை 315-ஐ தாண்டியது!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies