இமாச்சல பிரதேசத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால், வாகனங்களும், வீடுகளும் மண்ணுக்குள் புதைந்தன.
இமாச்சல பிரதேசம் சம்பா மற்றும் ராம்பூர் மாவட்டங்களில் மேக வெடிப்பு காரணமாக அதீத கனமழை பெய்தது.
வரலாறு காணாத கனமழையால் பல கிராமங்கள் அடித்து செல்லப்பட்டன. ஏராளமான வீடுகளும், வாகனங்களும் மண்ணில் புதைந்தன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில், பேரிடர் மீட்பு குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
பல இடங்களில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.