மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் கட்டி முடிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா நாட்டின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் மக்கள் சிகிச்சை பெற டெல்லி வர வேண்டாம் என்பதே இந்திய மருத்துவக் கழகத்தின் குறிக்கோள் என தெரிவித்தார்.
சிறந்த மருத்துவ சேவை வழங்குவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் எய்ம்ஸ் பெயரில் 22 மருத்துவமனைகளை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளதாக கூறினார்.
மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் கட்டி முடிக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.