புனே நீதிமன்றத்தில் தனது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் துபாய்க்கு தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
புனேயை சேர்ந்த அவர், பல்வேறு முறைகேடுகளை செய்து சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதாகவும், விதிகளை மீறி தனியார் வாகனத்தில் சைரனுடன் வலம் வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இவ்வாறு அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியதால், பூஜா கேத்கர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை புனே நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், பூஜா கேத்கர் துபாய்க்கு தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.