ராமருக்கு வரலாறே கிடையாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜராஜ சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ஆடித் திருவாதிரை விழா நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், ராஜேந்திர சோழன் வாழ்ந்ததற்கு அடையாளமாக அவர் கட்டிய கோயில், வெட்டிய குளங்கள், சிற்பங்கள் இருப்பதாகவும் ஆனால், ராமர் வாழ்ந்ததற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், ராமர் என்ற ஒருவருக்கு வரலாறே கிடையாது எனக்கூறிய சிவசங்கர், இந்த மண்ணில் பிறந்தவர்களை நாம் கொண்டாடாவிட்டால் எதற்கும் தொடர்பில்லாதவர்களை நம் தலையில் கட்டி விடுவார்கள் எனவும் கடுமையாக விமர்சித்தார். அவருடைய பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.