கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடுவழியில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்தை மாணவர்கள் தள்ளும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பொள்ளாச்சியில் இருந்து பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் அவ்வப்போது பழுதடைந்து நிற்பதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து திருவள்ளுவர் திடல் வழியாக சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென பழுதாகி நின்றது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.