காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் பகுதியில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீர் கரூர் பகுதிக்கு வந்தடைந்த நிலையில் இப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் கரையோர கிராமமான தவிட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ளகுடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.