சண்டை செய்வோமா...? வெனிசுலா அதிபரை வம்பிழுக்கும் எலான் மஸ்க்!
Nov 16, 2025, 05:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சண்டை செய்வோமா…? வெனிசுலா அதிபரை வம்பிழுக்கும் எலான் மஸ்க்!

Web Desk by Web Desk
Aug 4, 2024, 02:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவைப் பற்றி எலான் மஸ்க் 50 தடவைகளுக்கு மேல் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். நிக்கோலஸ் மதுரோவும் எலான் மஸ்க்கை திட்டித் தீர்த்திருக்கிறார். இருவருக்கும் இடையே என்னதான் பிரச்சனை என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வெனிசுலா அதிபர் தேர்தலில் மீண்டும் நிக்கோலஸ் மதுரோ அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. உள்நாட்டிலேயே இந்த வெற்றியை ஏற்றுக்கொள்ளாமல் அதிபருக்கு எதிரான மக்கள் அதிபர் மாளிகையை நோக்கி முற்றுகை போராட்ட பேரணி மேற்கொண்டனர்.

தலைநகர் எங்கும் வன்முறை கட்டுக்கடங்காமல் அரங்கேறின. அதிபர் அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் வெற்றியை அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் அங்கீகரிக்கவில்லை. வாக்குபதிவின் அட்டவணையை கேட்டதோடு, தேர்தல் முடிவுகளை விசாரணைக்கு உட்படுத்த அமெரிக்க கோரிக்கை வைத்தது.

இந்நிலையில் தான் , உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும்,டெஸ்லா நிறுவனத் தலைவருமான எலான் மஸ்க் ,தனது எக்ஸ் தளத்தில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவைத் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார்.

மதுரோ ஒரு அவமானம் மிக்க சர்வாதிகாரி என்றும், மதுரோவால் பெரிய தேர்தல் மோசடி நடந்திருப்பதாக எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் தலைவரான 53 வயதான எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட பல நாட்டு தலைவர்களை தனது எக்ஸ் தளத்தில் அடிக்கடி விமர்சனம் செய்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இடதுசாரி இலட்சியங்களையும் சோசலிசத்தையும் கண்டிக்கும் எலான் மஸ்க் ,இடதுசாரிகளின் முக்கிய அடையாளங்களில் ஒருவராக அறியப்படும் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவிற்கு எதிரான தாக்குதலை ஆரம்பித்திருக்கிறார் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, வெனிசுலாவில் இடதுசாரி அரசியல்வாதிகளின் ஊழலைக் காரணம் காட்டி இருப்பதோடு, வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்துடன் கூடிய தோல்வியுற்ற அரசையே பார்க்கிறேன் என்று எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.

சோசலிச மற்றும் இடதுசாரி சக்திகள் உலக சமுதாயத்தை இழிவுபடுத்துகின்றன என்ற தனது அரசியல் பார்வையை வலுப்படுத்த, வெனிசுலாவின் தேர்தல் முடிவுகள் பற்றி நெருப்பைப் பற்ற வைத்திருக்கிறார் எலான் மஸ்க் .

இந்நிலையில், மஸ்க்கின் கருத்துகளுக்குப் பதிலளித்துள்ள வெனிசுலா அதிபர், எலான் மஸ்க்கை கொலைகாரன் என்றும், நாட்டில் கலவரத்தை நடத்தும் போராட்டக்காரர்களுக்கு நிதியுதவி செய்ததாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

எக்ஸ் தளத்தில் 192 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட எலான் மஸ்க், பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மற்றும் அர்ஜென்டினாவின் அதிபர் ஜேவியர் மிலே ஆகியோரைப் பாராட்டியதோடு அவர்களுடன் ஒரே மேடையை பகிர்ந்து கொண்டார். அந்த நாடுகளிடமிருந்து பெற்ற வணிக நன்மைகளுக்காக ,எலான் மஸ்க், இதை செய்தார். என்ற விமர்சனம் அப்போதே எழுந்தது.

2020ம் ஆண்டில், டெஸ்லாவின் கார் பேட்டரிகளுக்கு முக்கிய மூலப் பொருளான லித்தியத்தின் பரந்த ஆதாரங்களைக் கொண்ட பொலிவியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சோசலிஸ்ட் கட்சியை அமெரிக்கா தூக்கியெறிய முடியும் என்று பதிவிட்டிருந்தார் எலான் மஸ்க்.

மேலும், தாம் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் ஆட்சியை விட்டு கவிழ்க்க முடியும் என்றும் மஸ்க் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது,வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ எதிராக தாக்குதலைத் தொடங்கி இருக்கிறார் எலான் மஸ்க். குறிப்பாக வெனிசுலா அதிபரை விட கழுதைக்கு அதிகம் தெரியும் என்று கிண்டலடித்திருக்கிறார். மதுரோவுக்கு எதிரான எதிர்ப்புகள் மற்றும் பேரணிகளின் வீடியோக்களைத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் எண்ணெய்த் தொழில் பற்றியும் எலான் மஸ்க் விமர்சனத்தை வைத்திருக்கிறார்.

கடந்த செவ்வாய் கிழமை வெனிசுலா தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் நிக்கோலஸ் மதுரோ, சண்டை தான் வேண்டும் என்றால் சண்டையிடலாம் என்று நேரடியாகவே எலான் மஸ்குக்கு சவால் விட்டு உலகையே ஆச்சரியப்பட வைத்தார். பதிலுக்கு எலான் மஸ்க்கும் தனது எக்ஸ் பக்கத்தில் ,சண்டைக்குத் தயாராக இருப்பதாகவும் , மதுரா தோற்றால் அதிபர் பதவியை விட்டு விலகவேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே, கடந்த காலங்களில், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் , ரஷ்ய அதிபர் மற்றும் FACEBOOK -மெட்டாவின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோர் உடன் நேருக்கு நேர் WWF போல சண்டை செய்ய போவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Tags: Shall we fight...? Elon Muskthe president of Venezuela!
ShareTweetSendShare
Previous Post

மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பயணிகள் அச்சம்!

Next Post

17 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்!

Related News

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

Load More

அண்மைச் செய்திகள்

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies