பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றது.
ஆடவர் ஹாக்கி பி பிரிவில், ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் 2-1 என முன்னிலை வகித்த இந்தியா, இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது லீக் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மேலும் 3 வெற்றி, ஒரு டிரா என 10 புள்ளிகளுடன் காலிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.