வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 300-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிலச்சரிவில் அன்புக்குரியோரை இழந்துவாடும் குடும்பங்களுக்காக பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.