ராகுல் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது துரதிர்ஷ்டம் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
தன் மீது அமலாக்கத்துறையை ஏவி விட்டு சோதனை நடத்த முயற்சி நடக்கிறது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இது குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.
அப்போது, அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க முயற்சி நடந்து வருவதாக கூறி வந்த ராகுல், தற்போது அந்த முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளார் என கிரிராஜ் சிங் விமர்சித்தார். மேலும், நாடாளுமன்றத்தில் ராகுல் உண்மைக்கு புறம்பாக பேசுவதுடன், வெளியே தவறான தகவல்களை பரப்புவதாகவும் கூறினார்.