பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பா.ஜ., எம்.பி., கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்துள்ளார்.
அண்மையில் மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல், வன்முறையும், பயமும் நிரம்பிய சக்கர வியூகத்தை பிரதமர் மோடி நெஞ்சில் தாங்கி இருக்கிறார் என தெரிவித்தார்.
ராகுலின் இந்தப் பேச்சுக்கு பா.ஜ., எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மாண்டி தொகுதி பா.ஜ.க எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் ராகுலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் பயன்படுத்திய வார்த்தைகள் நாட்டுக்கு நல்லதல்ல எனவும் கங்கனா தெரிவித்துள்ளார்.