காவிரி ஆற்றில் தண்ணீா் அதிகம் செல்வதால் நாமக்கல்லில் ஆடிப்பெருக்கு நாளின் முக்கிய நிகழ்வான கரையோர வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆடிப்பெருக்கு தினமான இன்று பல்வேறு கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில் காவிரி கரையோரப் பகுதியில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இந்நிலையில் நாமக்கல்லில் காவிரி நீர் அதிகளவு செல்வதால் பக்தர்களின் பாதுகாப்புக்கருதி கரையோர வழிபாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.
இதே போல கரூர் மாவட்டத்திலும் காவிரி ஆற்றில் இறங்குவதற்கும் வழிபாடு நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது. காவிரி ஆற்றில் 1 லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் தண்ணீரின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் ஆடிப்பெருக்கை ஒட்டி வழிபாடு நடத்த வந்த பக்தர்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். இதனிடையே நெரூர், வாங்கல், புகழூர், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட கரையோர கிராமங்களில் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து கண்காணித்துவருகின்றனர்.