டெல்லியில் ஜஹாங்கிர்புரி தொழிற்பேட்டை பகுதியில் கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.