சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை ஒட்டி, பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, சென்னை கிண்டியில் திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, சாமிநாதன், மா.சுப்பிரமணியன், ரகுபதி, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி மலைக்கோட்டை பகுதியில், அலங்கரிக்கப்பட்ட தீரன் சின்னமலையின் திருவுருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தீரன் சின்னமலையின் ஆன்மாவாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செயல்பட்டு வருகிறார் என பாஜக மாநில பிற்படுத்தப்பட்டோர் அணி செயலாளர் பாண்டியராஜ் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் திரு உருவச் சிலைக்கு பாஜக மாநில பிற்படுத்தப்பட்டோர் அணி நிர்வாகிகள் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.