நெல்லையில் திட்ட பணிகளை பார்வையிட சென்ற அமைச்சர் கே.என்.நேரு மாவட்ட ஆட்சியர் இல்லாததால் கோபம் அடைந்தார்.
பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடைகள் கட்டப்பட்டுள்ளது. மார்க்கெட் பகுதிகளில் கட்டப்பட்ட இந்த கடைகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் நேரில் வராததால் ஆத்திரமடைந்த அமைச்சர் கே.என்.நேரு மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது 2 மூத்த அமைச்சர்கள் வந்திருக்கிறோம், நீங்கள் எங்கு சென்றீர்கள் என கேள்வி எழுப்பினார்.