கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் ஆயிரத்து 208 வீடிகள் சுவடுகளே இல்லாமல் அழிந்து போயுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் 30ம் தேதி கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள், வீடுகள் மீது பாறைகள், மரங்கள் சரிந்து விழுந்ததில் தரைமட்டமாகின. நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் வீடுகள் இருந்ததா என எண்ணும் அளவுக்கு நிலைக்குலைந்து காணப்படுகிறது.
முண்டக்கை பகுதியில் 540 வீடுகள், சூரல்மலை பகுதியில் 600 வீடுகள், அட்டமலை பகுதியில் 68 வீடுகள் என மொத்தம் ஆயிரத்து 208 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்த தகவல் வெளியாகியுள்ளது.