தேசிய ரத்த நாள தினத்தை முன்னிட்டு தேனியில் விழிப்புணர்வு நடைப்பயிற்சி நடைபெற்றது.
ரத்த நாளம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பங்களாமேடு பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தொடங்கி வைத்து அவர்களுடன் நடைபயணம் மேற்கொண்டார். இதில் மருத்துவர்கள், மாணவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.