வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து ஆறாவது நாளாக நடைபெற்று வருகின்றன.
கேரள மாநிலம் வயநாட்டின் சூரல்மலை மற்றும் முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 361 பேர் உயிரிழந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி, 215 சடலங்களும், 143 உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த எண்ணிக்கையில், 98 ஆண்கள், 87 பெண்கள் மற்றும் 30 குழந்தைகள் அடங்குவர். அதே நேரத்தில், 148 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் களத்தில் உள்ளதாகவும், 6வது நாளாக மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் மேகா ஸ்ரீ தெரிவித்தார்.