கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரத்தில் உள்ள மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆடி 19ஐ ஒட்டி 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முன்னதாக மகாதானபுரம் காவிரி ஆற்றில் பூசாரி கத்தி வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மகாலட்சுமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டு வீதியுலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.