வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால், 32 பேர் உயிரிழந்தனர்.
வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தலையிட்டு, இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்ததையடுத்து, போராட்டம் ஓரளவு கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி, மாணவர்கள் நாடு முழுவதும் வீதியில் இறங்கி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வன்முறை ஏற்பட்டதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.
இந்த வன்முறையில் 32 பேர் உயிரிழந்ததாகவும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்ட சிலேட் நகரில், இந்தியர்கள் தங்கியிருக்கும்பட்சத்தில், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.