மேற்கு வங்க வெள்ளத்துக்கு ஜார்க்கண்ட்தான் காரணம் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதற்கு அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மம்தா பானர்ஜியை தாம் மதிப்பதாகவும், அதற்காக மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு ஜார்க்கண்ட்தான் காரணம் என அவர் கூறியதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் துயரத்தைப் போக்க ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டுமென கூறிய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, ஒவ்வொரு ஆண்டும் அருணாசல பிரதேசம் மற்றும் பூடானிலிருந்து வெள்ளம் பெருக்கெடுத்து வருவதாகவும், இதற்காக அவர்களை குறைசொல்ல முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.