சென்னையின் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது.
தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில், நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்தது. எழும்பூர், சென்னை சென்ட்ரல், கிண்டி, விமான நிலையம், அடையாறு உள்பட பல்வேறு பகுதிகளில் பகுதிகளில் மழை பெய்தது.
அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 9 சென்டி மீட்டர் மழை பெய்தது. அதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.