வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் அடையாளம் தெரியாத 67 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
வயநாடு மாவட்டம் பூஞ்சிரித்தோடு, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 395- ஆக உயர்ந்துள்ளது.
மீட்கப்பட்ட உடல்கள் உருக்குலைந்து காணப்படுவதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,இந்நிலையில் உயிரிழந்த 67 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
சர்வமத பிரார்த்தனையுடன் நடைபெற்ற இறுதி நிகழ்ச்சில் ஏராளமான பொதுமக்கள் திரண்டும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.